தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்

200

Product Total: 200

Description

சாதிய அடையாளங்கள் திட்டமிட்டோ, திட்டமிடாமலோ படங்களில் இடம்பெறுகின்றன.‌ அவை விமர்சனமாகவோ, விதந்தோதியோ அமையலாம். அது கதையாடல் தளத்தில் எந்த நோக்கில் காட்டப்பட்டாலும் அதற்கான அர்த்தம் சமூக நடைமுறையில் தான் உருவாகின்றது. அல்லது உருவாக்கப்படுகின்றது.

 சினிமா பல்வேறு கலைகளின் கூட்டுச் செயல்பாடாக வெளிப்படும் பிரம்மாண்டமான வெளி, அதனாலயே காட்சி ஊடகமான அதன் தாக்கம் பெரியது. இந்நிலையில்தான் சாதியத் சிந்தனைகளுக்கான வாய்ப்புகளைச் சமூகத்தின் ஏதாவதொரு தரப்பு உருவாக்கிக் கொள்வதைப் போலவே அவ்வாறு உருவாக்கிக் கொள்வதற்குக் குறிப்பிட்ட திரைப்பிரதியிலேயே கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் சாத்தியங்கள் என்ன என்று ஆராய வேண்டியுள்ளது அதை இந்நூல் ஆராய்ந்து தந்துள்ளது. மேலும் மையநீரோட்டத் திரைப்படங்களில் அல்லது வெகுசனப் பார்வையாளர்களைச் சென்றடையக் கூடிய திரைப்படங்களில் அதன் அரசியல் தன்மை, உள்ளடக்கம், எளிய மக்களை காட்சிப்படுத்துவதின் தன்மை என்று ஒவ்வொரு கூறையும் கவனமாக இந்நூல் ஆய்ந்து அதைப் பொதுவெளியில் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் அமைந்திருப்பதுதான் இதனுடைய சிறப்பம்சம்.

Additional information

Weight 200 g
நூலின் பெயர்

ஆசிரியர்

முதற் பதிப்பு

மூலப் பதிப்பு

விலை

வெளியீடு

நீலம் பதிப்பகம்

இளம் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதும்,
மூத்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின்
படைப்புகளை மீள்பதிப்பு செய்வதையும் முன்னெடுத்து நீலம் பதிப்பகம் பயணிக்கிறது.

Contact Us

#5 Nallathambi St,
Annasalai, Triplicane
Chennai - 600002

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
200
Neelam Books